New Updates! Fresh news just arrived.

இன்று முதல் அஸ்வெசும கொடுப்பனவு; பயனாளிகளுக்கு முக்கிய அற...

News

இன்று முதல் அஸ்வெசும கொடுப்பனவு; பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

June 18, 2026 9:38 am
இன்று முதல் அஸ்வெசும கொடுப்பனவு; பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் தகுதிபெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜூன் மாதக் கொடுப்பனவுகள் இன்று (18) முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதிபெற்றுள்ள 13 இலட்சத்திற்கும் அதிகமான, அதாவது 1,373,248 பயனாளி குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதற்காக அரசாங்கம் 1090 கோடியே 48 இலட்சத்து 1,250 ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை இன்று பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படவுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக தகவல்களை நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அஸ்வெசும பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளை சரிபார்த்து கொடுப்பனவு வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now