New Updates! Fresh news just arrived.

இணுவில் பகுதியில் தாக்குதல் சம்பவம்: நால்வர் காயம்! - Gur...

News

இணுவில் பகுதியில் தாக்குதல் சம்பவம்: நால்வர் காயம்!

March 23, 2026 10:40 pm
இணுவில் பகுதியில் தாக்குதல் சம்பவம்: நால்வர் காயம்!
இன்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உடுவில் - மல்வம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை நான்காவது தாரமாக திருமணம் செய்துள்ளார்.

பின்னர் அங்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனைவியை விட்டுவிட்டு இணுவில் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து கேட்பதற்காக அந்த பெண்ணின் உறவினர்கள் மூவர் இணுவில் பகுதியில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு சென்றனர்.

இதன்போது குறித்த நபருக்கும் பெண்ணின் உறவினர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டுக்கு உள்ளே சென்ற நபர் புகையிலை வெட்டும் கத்தியை எடுத்து வந்து மூவர் மீதும் கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் பெண் வீட்டை சேர்ந்த இருவர் படுகாயமடைந்ததுடன் மற்றையவர் சாதாரண காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் அவர்கள் தற்காப்புக்காக குறித்த நபர் மீது மேற்கொண்ட தாக்குதலில் அவரும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுன்னாகம் பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now