New Updates! Fresh news just arrived.

மாற்றுத்திறனாளி மாணவன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அன...

News

மாற்றுத்திறனாளி மாணவன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!

October 14, 2026 4:21 pm
மாற்றுத்திறனாளி மாணவன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணம் - கைதடியில் அமைந்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் பாடசாலையில் கல்வி பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பாடசாலையினுடைய மாணவர் விடுதியில் தங்கி நின்று கல்வி கற்கும் மட்டக்களப்பு பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய மாணவன் மீதே நேற்றையதினம் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் காயமடைந்துள்ள குறித்த மாணவன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த சம்பவமானது சாவகச்சேரி பொலிஸாரினுடைய கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பொலிஸார் இது தொடர்பில் கிராமசேவகருக்கு தெரியப்படுத்தியதோடு, இது குறித்து மேலதிக விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now