New Updates! Fresh news just arrived.

ஹட்டனில் இ.போ.ச பேருந்தை வழிமறித்து சாரதி மீது தாக்குதல்!...

News

ஹட்டனில் இ.போ.ச பேருந்தை வழிமறித்து சாரதி மீது தாக்குதல்!

February 7, 2026 7:05 pm
ஹட்டனில் இ.போ.ச பேருந்தை வழிமறித்து சாரதி மீது தாக்குதல்!
டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி பாடசாலை மாணவர்களினை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி மீது, அதே வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர்கள் மீது இன்று (07) முற்பகல் தாக்குதல் ஹட்டன் இ.போ.ச டிப்போவின் தரைக்கால முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, டயகமவில் இருந்து காலை 6:30 மணிக்குப் பயணத்தினை ஆரம்பித்த குறித்த பேருந்து ஹட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், அதற்குப் பின்னால் துரத்தி வந்த தனியார் பேருந்தினுடைய சாரதி, இ.போ.ச பேருந்தினை வழிமறித்து, சாரதி ஆசனத்தின் கதவைத் திறந்து தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபையினுடைய பேருந்து 5 நிமிடங்கள் முன்கூட்டியே புறப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தினை அடிப்படையாகக் கொண்டே லிந்துலை, மெராயா நகருக்கு அருகில் வைத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து சாரதியும் நடத்துனரும் இணைந்தே குறித்த தாக்குதலினை நடத்தியவேளை பேருந்தினுள் பாடசாலை மாணவர்கள் உட்பட ஏராளமான பயணிகள் இருந்ததாகவும் ஹட்டன் டிப்போ தரைக்கால முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் பேருந்தில் பயணித்த பயணி ஒருவரினால் கையடக்கத் தொலைபேசி ஊடாக வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருப்பதாகவும், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருப்பதாகவும் தரைக்கால முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now