New Updates! Fresh news just arrived.

நெல்லியடியில் வீடு மீது தாக்குதல் – NPP உறுப்பினர் கைது! ...

News

நெல்லியடியில் வீடு மீது தாக்குதல் – NPP உறுப்பினர் கைது!

August 30, 2026 3:19 pm
நெல்லியடியில் வீடு மீது தாக்குதல் – NPP உறுப்பினர் கைது!
யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் வீடொன்றின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடியில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டை இலக்கு வைத்து சந்தேகநபர் கல் வீச்சில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கெமராக்களும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி மேற்கு பிரதேச சபை உறுப்பினரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த நபர் நாளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now