குவைத் விமான நிலையத்தின் மீது தாக்குதல்: பலர் காயம் - வி...
News
குவைத் விமான நிலையத்தின் மீது தாக்குதல்: பலர் காயம் - விமான சேவைகள் இடைநிறுத்தம்!
குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் நடத்தியுள்ள தீவிர ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் பலர் காயமடைந்துள்ளதுடன், விமான நிலையத்தின் முதலாம் முனையக் கட்டிடம் (T1 Building) பாரிய சொத்துச் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த தாக்குதலை அடுத்து குவைத்திற்கான அனைத்து விமான சேவைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குவைத் சிவில் விமானப் போக்குவரத்து பொது அதிகாரசபை அறிவித்துள்ளது.
மேலும், தற்போது பறந்துகொண்டிருக்கும் விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன. அமெரிக்காவுடனான மோதல் தீவிரமடைந்துள்ள பின்னணியில், குவைத் வான்பரப்பில் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன் ஒலிகள் எழுப்பப்பட்டுள்ளதால் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.