பாதிரியார் மீதான தாக்குதல்: 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு...
News
பாதிரியார் மீதான தாக்குதல்: 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பிணை!
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரினை தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்து கைது செய்யப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினுடைய மோட்டார் சைக்கிள் குழுவின் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
இது தொடர்பிலான வழக்கு இன்று (29) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் ஒவ்வொருவரினையும் தலா ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுவிக்க கம்பஹா நீதவான் உத்தரவிட்டபட்டுள்ளது.
சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களது பணி இடைநீக்கத்தினைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவரினை அடையாள அணிவகுப்பின் போது பாதிரியாளர் அடையாளம் கண்டுள்ளதோடு, அவர்களில் ஒருவரே தன்னைத் தாக்கியவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய இரு உத்தியோகத்தர்களும் குறித்த தருணத்தில் அருகில் நின்றவர்கள் என்றும் மதகுரு தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.