New Updates! Fresh news just arrived.

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கட்டமைப்பின் மீது தாக்கு...

News

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கட்டமைப்பின் மீது தாக்குதல்!

March 18, 2026 8:42 pm
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கட்டமைப்பின் மீது தாக்குதல்!
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு பகுதியுடன் தொடர்புடைய ஈரானிய நிலைகள் மீது இஸ்ரேலால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் ஆபத்தானவை மற்றும் பொறுப்பற்றவை என கட்டார் தெரிவித்துள்ளது.

கட்டார் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் ஒரே எரிவாயு பகுதியில் இருந்தே எரிவாயுவினை பெறுகின்ற நிலையில் ஈரானியப் பகுதி தெற்கு பேர்ஸ்' என அழைக்கப்படுகின்றது.

குறித்த இடத்தில் உலுள்ள தனது பெட்ரோகெமிக்கல் வளாகம் தாக்கப்பட்டதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.

எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களானது உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என கட்டார் வெளியுறவு அமைச்சின்னுடைய ஊடகப்பேச்சாளர் மாஜித் அல் அன்சாரி தெரிவித்துள்ளார்.

முக்கியமான வசதிகளை இலக்கு வைப்பதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று கூறிய அவர், சர்வதேச சட்டங்களுக்கு இணங்கி நடக்குமாறும் பதற்றத்தைத் தணிக்கப் பாடுபடுமாறும் அனைத்துத் தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now