அட்டாளைச்சேனை தீகவாபி பிரதேச மக்களுக்கு காணி உரிமைப் பத்த...
News
அட்டாளைச்சேனை தீகவாபி பிரதேச மக்களுக்கு காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைப்பு
தீகவாபி 01 மற்றும் தீகவாபி 02 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த பொது மக்களால், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் ஊடாக அரசாங்கத்திடம் கோரப்பட்டிருந்த அனுமதிப் பத்திரங்கள் சில அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.எம்.அப்கர் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஆதம் பாவா அபூபக்கர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை , காணி ஆணையாளர் நாயகம் திருமதி ஜீ.டி.நதீகா மற்றும் பிரதி காணி ஆணையாளர் திருமதி கே.ஆர்.மெத்மா ரணசிங்க, உதவிக் காணி ஆணையாளர் டபிள்யூ.சி.தயங்க டி சில்வா அத்தோடு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஏ.எல்.ஐ.பானு, அமைச்சின் சட்ட ஆலோசகர் திருமதி ஆர்.எஸ்.போமாலுவாகே, அம்பாறை மாவட்ட உதவிக் காணி ஆணையாளர் ஏ.எம்.ஹபீபுர் ரஹ்மான் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(கே.எ. ஹமிட்)