New Updates! Fresh news just arrived.

களுத்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரைக் கொலை செய்ய ...

News

களுத்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரைக் கொலை செய்ய முயற்சி?

February 8, 2026 10:58 am
களுத்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரைக் கொலை செய்ய முயற்சி?
களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட நிலையில் துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்துள்ளது.

இதன்படி, களுத்துறை மாநகர சபை வேட்பாளரைரினை இலக்கு வைத்து நேற்று (07) இரவு குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்திருப்பதாகவும், குறி தவறியதால் முயற்சி தோல்வியடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்திற்கு முகங்கொடுத்தவர் களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் பந்துல பிரசன்ன என்பவராவார்.

இவரினை இலக்கு வைத்து 9 மாதங்களுக்கு முன்னரும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலொன்று நடத்தப்பட்டதாகவும், அதுவும் தோல்வியடைந்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, பிஸ்டல்களுக்குப் பயன்படுத்தப்படுகின்ற உயிருள்ள தோட்டா ஒன்றும், கைப்பேசி ஒன்றும் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now