New Updates! Fresh news just arrived.

சைபர் தாக்குதலால் பறிபோன நிதியை மீளப் பெற முயற்சி!

News

சைபர் தாக்குதலால் பறிபோன நிதியை மீளப் பெற முயற்சி!

April 23, 2026 7:10 pm
சைபர் தாக்குதலால் பறிபோன நிதியை மீளப் பெற முயற்சி!
சைபர் குற்றவாளிகளினால் நிதி அமைச்சில் இருந்து அபகரிக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில், முடிந்தவரைக்கும் பெருமளவான தொகையினை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக நிதி அமைச்சினுடைய செயலாளர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார்.

இதன்படி, அமைச்சின் மண்டபத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஹெக்கர்கள் மின்னஞ்சல் ஊடாக அமைச்சினுடைய கட்டமைப்புக்குள் நுழைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய தூதுவர் மற்றும் கடன் வழங்குநர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹர்ஷன சூரியபெரும மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் சைபர் குற்றவாளிகள் எமது கட்டமைப்புக்குள் நுழைய முயற்சிப்பதினை நாம் அறிந்துகொண்டோம்.

இது குறித்து தகவல்கள் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டு எமது நாட்டிற்கு பாதிப்பு ஏற்படாதவாறு தடுத்து அதனைத் தீர்த்தோம்.

எனினும், இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவமானது நடந்திருக்கலாம் என எமக்குத் தோன்றியது. அதனால்தான் கடந்தகாலக் கொடுப்பனவுகள் தொடர்பில் ஆராயும் வேலைத்திட்டத்தினை தயார் செய்தோம்.

அதற்காகக் காலம் எடுத்துக்கொண்டோம். அதன் போதே, கடந்த ஜனவரி மாதத்திலும் ஒரு கொடுப்பனவின் போது ஹெக்கர்களின் செயற்பாடு இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now