உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வ...
News
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள்: ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணமும் முன்னெடுப்பு!
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேசத்தில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் கடந்த 14.11.2026 அன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையினுடைய ஏற்பாட்டில், வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி மருத்துவர் எம்.எச். சனுஷ் காரியப்பர் தலைமையில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் கலந்து கொண்டார்.
இதனை முன்னிட்டு நீரிழிவு நோயின் தாக்கம், அதனால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகள், நோயைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, “Awareness Cycling – Ride for a Healthier Tomorrow” (ஆரோக்கியமான நாளைய தினத்திற்கான விழிப்புணர்வு சைக்கிள் பயணம்) எனும் தொனிப்பொருளில் சஹிரியன்ஸ் 90 ரைடர்ஸ் (Zahirians' 90 Riders) அமைப்பினரின் பங்களிப்புடன் விழிப்புணர்வு சைக்கிள் பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டது.
காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெற்ற இப்பயணம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திலிருந்து ஆரம்பமாகி, சம்மாந்துறை ஊடாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையைச் சென்றடைந்தது.
நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், காலமுறைப்படி இரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதித்தல், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தல், நாளாந்தம் உடற்பயிற்சியில் ஈடுபடுதல் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல் போன்ற விடயங்களின் முக்கியத்துவம் இந்நிகழ்வுகளின்போது வலியுறுத்தப்பட்டது.
நீரிழிவு நோய் என்பது உரிய விழிப்புணர்வு, முறையான மருத்துவப் பரிசோதனை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு நோயாகும். எனவே, நோய் ஏற்படுவதற்கு முன்னரான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பைப் பேணுவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற அடிப்படையில், நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதன் ஊடாக நோயற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புவதே இவ்வாறான நிகழ்வுகளின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.
நூருல் ஹுதா உமர்