New Updates! Fresh news just arrived.

அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

News

அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 2, 2026 11:55 pm
அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!
அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானினுடைய அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனியினுடைய மனைவியும் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இதன்படி, அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்திருந் நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தியினை வெளியிட்டுள்ளன.

79 வயதான Mansoureh Khojasteh Bagherzadeh, அதி உயர் தலைவரினை கொல்வதற்கு நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்திருந்த அவர் சுயநினைவிழந்திருந்ததாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இஸ்ரேல் - அமெரிக்கா நடத்திய குறித்த தாக்குதலில் ஈரானினுடைய அதிஉயர் தலைவர், அவரது மகள், மருமகன், பேரப்பிள்ளை மற்றும் தற்போது மனைவி ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர இராணுவத்தினுடைய சிரேஸ்ட நிலை தலைவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now