மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்கவுக்கு பிணை! ...
News
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்கவுக்கு பிணை!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமான கமல் அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (20) முற்பகல் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்க பிலஸ்ஸ நீதவான் டபிள்யூ. எம். எம். ஐ. வாசல உத்தரவிட்டதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார்.
அதற்கமைய 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாகனம் ஒன்றைப் பதிவு செய்யும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக, கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது