லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
News

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட லங்கா உப்பு நிறுவனத்தினுடைய தற்போதைய பொது முகாமையாளரான ரத்நாயக்க முதியன்சேலாகே குணரத்னவுக்கு பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, சந்தேகநபருக்கு தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல உத்தரவிட்டுள்ள கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரினுடைய கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினுடைய அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களினை சமர்ப்பிக்கையில், கொள்முதல் செயல்முறைக்கு புறம்பாக ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்தில் பொதியிடல் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் ஊடாக அரசாங்கத்திற்கு 14,300,000 ரூபா நட்டத்தினை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, குறித்த சந்தேகநபரை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இன்று காலை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.