நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபருக்கு பிணை!
News

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா சரீப்பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (27) கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை 21 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் உதைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் பல தரப்பினரின் கோரிக்கைக்கமைய மாலை கல்முனை தலைமையக பொலிஸார் சந்தேக நபரை கைது செய்திருந்தனர்.
இதன் போது இன்று (28) மாலை கல்முனை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா சரீப்பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான் வழக்கினை மறுதவணைக்காக ஜூலை மாதம் 13 ஆந் திகதி வரை ஒத்தி வைத்தார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதம பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்றிருந்த முறைப்பாட்டிற்கமைய 21 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நாயானது யாழிலிருந்து கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டு வரும் குழுவினரோடு பயணித்து வரும் சுப்பிரமணியன் என்கின்றம பெயருடைய நாயாகும்.
இந்நிலையில் நேற்று கல்முனை பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரினால் தாக்கப்பட்டமெய்யானது, மனிதாபிமானமற்ற செயல் என்று இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சுமார் 450 கிலோ மீற்றர் தூரம் பயணித்துள்ள குறித்த சுப்பிரமணியன் என்கின்ற நாய் தாக்கப்பட்டமையானது சமூக ஊடகங்களில் வைரலானதினைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு கண்டங்களினை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாயை தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்படுவதற்கு முன்பு தனது சமூக ஊடக பக்கத்தில் குறித்த நாயை தான் துன்புறுத்தலுக்குள்ளாகியமை குறித்து மன்னிப்பு கோரி உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
பாறுக் ஷிஹான்