New Updates! Fresh news just arrived.

முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவதற்குத் தடை!

News

முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவதற்குத் தடை!

March 18, 2026 2:41 pm
முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவதற்குத் தடை!
இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களினை (ஆளில்லா விமானங்கள்) இயக்குவற்கு முற்றாகத் தடை செய்யப்பட்டிருப்பதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

இது குறித்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விசேட அறிவிப்பொன்றினையும் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில், உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் சட்டவிரோதமான முறையில் ட்ரோன்களினை இயக்கிய நபர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகளானது எடுக்கப்பட்டுள்ளமையினை விமானப்படை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே, இலங்கையில் ட்ரோன்களினை இயக்குபவர்கள், தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கி, முறையான அனுமதியினைப் பெற்ற பின்னரே ட்ரோன்களைப் இயக்க வேண்டும் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதினையும், ட்ரோன் இயக்குபவர்கள் தேவையற்ற சட்டச் சிக்கல்கள் மற்றும் சிரமங்களுக்கு உள்ளாவதைத் தவிர்ப்பதினையுமே குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையினுடைய நோக்கம் எனவும் இலங்கை விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now