நடிகர் ரஜினியின் பெயர் மற்றும் படங்களை பயன்படுத்துவதற்கு ...
News
நடிகர் ரஜினியின் பெயர் மற்றும் படங்களை பயன்படுத்துவதற்கு பிற அமைப்புகளுக்கு தடை: தலைமை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
நடிகர் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைமை அலுவலகம் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சியோ, அமைப்போ பயன்படுத்தக்கூடாது என தலைவரின் உத்தரவுப்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது." என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் நேரங்களிலும் அரசியல் நிகழ்வுகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்களின் சமூக ஊடகப் பிரசாரங்களில் ரஜினிகாந்தின் முகத்தையும் பெயரையும் பயன்படுத்தி வருவதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன.
இதனைத் தடுக்கும் பொருட்டும், ரசிகர்களிடையே தேவையற்ற அரசியல் குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும், "தலைவர் ரஜினிகாந்தின் நேரடி உத்தரவின் பேரில்" இந்த அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரசிகர் மன்ற தலைமைத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.