குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை: பொலிஸார் சோதனை முன்...
News
குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை: பொலிஸார் சோதனை முன்னெடுப்பு!
வீட்டினுடைய குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையினை இன்று அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவு சோதனையொன்றினை மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலஹேன கிராமத்திலுள் வீடொன்றில் குறித்த குளியலறையில் சட்டவிரோத சாராய உற்பத்தி நடைபெற்றுவதாக அம்பாறை மாவட்டத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவினுடைய பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரியங்கரவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் கிடைத்திருந்தது.
குறித்த தகவலினடிப்படையில் குறித்த சோதனை நடத்தப்பட்டதோடு, 3,60,000 மில்லி லிட்டர் கோடா மற்றும் 30,000 மில்லி லிட்டர் கள்ளச்சாராயம் காய்ச்சும் உபகரணங்களோடு, சந்தேக நபரை கைது செய்ததுடன் கள்ளச்சாராய ஆலை சில காலமாக தமன மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மதுபானம் விநியோகித்து வந்துள்ளமையும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும் குறித்த சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ள உபகரணங்களும் மற்றும் சந்தேக நபரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பாறுக் ஷிஹான்