மூடிய அறைக்குள் BBQ அடுப்பு : நச்சு வாயுவால் தம்பதியினர் ...
News
மூடிய அறைக்குள் BBQ அடுப்பு : நச்சு வாயுவால் தம்பதியினர் உயிரிழப்பு! நுவரெலியாவில் சோகம்
நுவரெலியா, மீப்பிலிமன பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர், மூடிய அறைக்குள் பார்பிக்யூ (BBQ) அடுப்பைப் பயன்படுத்தியதால் வெளியான நச்சு வாயுவைச் சுவாசித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று (03) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அவிசாவளையைச் சேர்ந்த குறித்த தம்பதியினர், நுவரெலியா மீப்பிலிமன பகுதியில் சுற்றுலா விடுதியொன்றின் நிர்மாணப் பணிகளை முன்னெடுத்து வந்துள்ளனர். விடுதியின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை அருகிலுள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளனர்.
நுவரெலியா பகுதியில் நிலவிய கடும் குளிர் காரணமாக, தம்பதியினர் தங்கியிருந்த அறைக்குள் BBQ அடுப்பை எரியவிட்ட நிலையிலேயே உறங்கச் சென்றுள்ளனர். இதன்போது அடுப்பிலிருந்து வெளியான கார்பன் மொனாக்சைடு வாயுவைச் சுவாசித்ததால் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.