வளர்ச்சியடைந்த நாடொன்றை கட்டியெழுப்ப சிறந்த குடிமக்கள் அவ...
News
வளர்ச்சியடைந்த நாடொன்றை கட்டியெழுப்ப சிறந்த குடிமக்கள் அவசியம்: பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய!
வளர்ச்சியடைந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்குச் சிறந்த குடிமக்கள் அவசியம் என்றும், சிறந்த குடிமக்கள் தரமான கல்வியின் மூலமே உருவாக்கப்படுகின்றனர் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நேற்றையதினம் (29) ஆரம்பப் பாடசாலை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் புத்தளம், இஹல புளியங்குளம் வித்தியா சக்கரவர்த்தி மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தை மாணவர்களின் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கிராமிய பாடசாலைகள், நகரப் பாடசாலைகள், பிரபல பாடசாலைகள், பிரபலமற்ற பாடசாலைகள் எனப் பாடசாலைகளுக்கிடையே காணப்படும் பௌதிக வளங்களின் ஏற்றத்தாழ்வை நீக்குவதன் மூலம், அனைத்துக் குழந்தைகளுக்கும் சம வாய்ப்புகளையும் தரமான கல்வியையும் வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்பப் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் இப்பாடசாலையின் அபிவிருத்திப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு அமையத் தயாரிக்கப்பட்ட ஆரம்பப் பாடசாலை அபிவிருத்தி வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டே இக்கட்டடத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்திப் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மாணவர்கள் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கற்றல் அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வசதிகளைக் கொண்ட இக்கட்டடத்தில் ஸ்மார்ட் பலகைகள் (Smart Boards), செயற்பாட்டு அறைகள் (Activity Rooms), வாசிப்பு அறைகள் (Reading Rooms) மற்றும் சுகாதார வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், விசேட தேவையுடைய மாணவர்களும் இலகுவாக அணுகக்கூடிய வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளமையும் ஒரு சிறப்பம்சமாகும் எனப் பிரதமர் குறிப்பிட்டார்.
புத்தளம் இஹல புளியங்குளம் வித்தியா சக்கரவர்த்தி மகா வித்தியாலயத்தின் புதிய கட்டடம் மற்றும் வசதிகளின் அபிவிருத்திக்காக 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் மேலதிக நிதியும் வழங்கப்படவுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
ஆசிரியரின் ஒரேயொரு வார்த்தையினால் குழந்தையின் எதிர்காலம் முழுமையாகத் தீர்மானிக்கப்படுகின்றது எனக் குறிப்பிட்ட பிரதமர், எவ்வளவு பௌதிக வளங்களை வழங்கினாலும், வகுப்பறையில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான தொடர்பும் ஆசிரியரின் பங்களிப்பும் குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மிக முக்கியமானவை என வலியுறுத்தினார்.
பிரதமர் புதிய கட்டடத்தை மாணவர்களின் பாவனைக்குக் கையளித்ததைத் தொடர்ந்து வகுப்பறைகளைப் பார்வையிட்டதுடன், புதிய கட்டடத்திற்கு முன்பாக நாவல் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.
பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பிரதமர் இதன்போது சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ நிகழ்வில் உரையாற்றுகையில், ஆரம்பப் பாடசாலைகளை நவீனமயமாக்குதல் மற்றும் அபிவிருத்தி செய்தலுக்கான தேசிய வேலைத்திட்டத்திற்காகப் பாடசாலைகளைத் தெரிவு செய்யும்போது, அவற்றின் ஆற்றல், சுற்றியுள்ள பிரதேசக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் சேவை மற்றும் ஏனைய வசதிகள் என்பன அளவுகோல்களாகக் கருதப்பட்டதாகத் தெரிவித்தார்.
நாட்டின் எந்தப் பிரதேசத்திலுள்ள எந்தப் பாடசாலைக்குச் சென்றாலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வியில் ஒரே மாதிரியான வசதிகள், வகுப்பறைகள், கட்டடங்கள், உபகரணங்கள் மற்றும் சூழலை வழங்குவதன் மூலம் ஆரம்பக் கல்வியைத் தரப்படுத்துவதற்கு இந்த வேலைத்திட்டம் வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வேலைத்திட்டம் நிறைவடையும்போது, இத்தகைய வசதிகளைக் கொண்ட சுமார் 309 ஆரம்பப் பாடசாலைகளை நாட்டின் ஒவ்வொரு கோட்டத்திலும் உருவாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண பிரதம சங்கநாயக்க வணக்கத்துக்குரிய தம்மன்னாவெட்டிய ரதனஜோதி நாயக்க தேரர், பொது நிர்வாகத்துறை அமைச்சர் சந்தன அபேரத்ன, கல்வி மற்றும் உயர்கல்விப் பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜனக ஹேரத், ஹிருணி விஜேசிங்க, மொஹமட் பைசல், கருவலஸ்வெவ பிரதேச சபையின் தலைவர் நீல் நவரத்ன ஆகியோருடன் அரச அதிகாரிகளும் அப்பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.