பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நா...
News
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியினுடைய தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை நேற்று (19) நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பின் போது, தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற சமகால அரசியல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, தமிழர்களின் பூர்வீக இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு, அவ்விடங்களில் திட்டமிட்ட முறையில் பௌத்த விகாரைகளானது அமைக்கப்படுகின்றமை மற்றும் செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது தோண்டப்பட்டு வரும் நிலையில் எடுக்கப்படுகின்ற எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதோடு, தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கான நீதியை நிலைநாட்டுவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு, ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து இருதரப்பிற்கும் இடையில் ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இத்தகைய சந்திப்புகளினையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் இதன்போது இணக்கம் காணப்பட்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினருக்கு மதிய உணவு உபசரிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்டச் சந்திப்பில், தமிழ் மக்களினுடைய அரசியல் விவகாரங்களில் 50 ஆண்டுகால நீண்ட அனுபவமிக்க மூத்த தலைவரான கே. எஸ். ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியினுடைய தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மற்றும் கட்சியினுடைய முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.