இந்திய அணியின் தலைவராக புவனேஷ்வர் குமார்.
News

ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் மிக்க வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் இந்த அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 1 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக் கிரிக்கெட் திருவிழாவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த இரு முக்கிய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
புவனேஷ்வர் குமார் உட்பட மொத்தமாக 7 வீரர்கள் இந்த ஆண்டிற்கான ஹாங்காங் சிக்சஸ் போட்டிகளில் களமிறங்கும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆர்சிபி அணியில் புவனேஷ்வர் குமாருடன் இணைந்து விளையாடிய ஆல் ரவுண்டர் குருணால் பாண்டியாவும் இந்த அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஐ.பி.எல் தொடர்களில் விஷேடமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் ராணா மற்றும் ஷஷாங்க் சிங், ராகுல் திவேதியா மற்றும் ராகுல் திரிபாதி அத்தோடு தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டு இவ்வணி கட்டமைக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஆர்சிபி அணிக்காக வேகமாக பந்து வீசிய புவனேஷ்வர் சுமார் 16 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாக உபி T20 லீக் தொடரில் 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது பழைய விஷேடமான திறமையை நிரூபித்திருந்தார். இவ் விஷேட ஆட்டத்தின் காரணமாகவே அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இந்த தொடர், ஹாங்காங்கின் டின் குவாங் ரோடு மைதானத்தில் நடைபெறுகின்றது. மொத்தம் 12 நாடுகள் பங்குபெறுகின்ற இந்தப் போட்டியில், ஒரு அணிக்கு 6 வீரர்கள் மட்டுமே களமிறங்குவர். விக்கெட் கீப்பரைத் தவிர அணியின் மற்ற 5 வீரர்களும் தலா ஒரு ஓவர் இற்கு பந்துவீச வேண்டும்.
ஒரு போட்டியில் அதிகபட்சம் 5 ஓவர்கள் மட்டுமே வீசப்படும். எந்தவொரு பேட்டரும் 50 ஓட்டங்களை எட்டினால், அவர் கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும் என்பதே இத்தொடரின் சிறப்பு விதியாகும். கடந்த சீசனில்
இந்திய அணி,
தினேஷ் கார்த்திக் தலைமையில் வெற்றிப் பெற தவறிய நிலையில், இம்முறை புவனேஷ்வர் குமார் தலைமையில் கோப்பையைக் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி களமிறங்குகிறது.