New Updates! Fresh news just arrived.

நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி! - G...

News

நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

June 29, 2026 8:40 pm
நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!
ரிதீமாலியத்த - குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி மரணித்துள்ளனர்.

இவ்வாறு மரணித்தவர்கள் கண்டி, பூஜாரப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரும் கண்டி, கடுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும், ஆவர்.

நேற்று (28) கண்டிப் பகுதியிலிருந்து 33 பேரைக் கொண்ட குழுவினர் லொக்கல்லா ஓயா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விவசாயப் பண்ணை என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த சுற்றுலாத் தலம் ஒன்றிற்கு வருகை தந்துள்ளனர்.

அங்கு பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் ஈடுபட்ட பின்னர், லொக்கல்லா ஓயா குளத்தின் நடுவிலுள்ள சிறிய தீவொன்றிற்கு, அந்த சுற்றுலாத் தலத்திற்குச் சொந்தமான இரண்டு சிறிய படகுகளை பாதுகாப்பற்ற முறையில் ஒன்றாக இணைத்துக் கட்டப்பட்ட மிதவைப்படகு மூலம், நீராடுவதற்காகச் சென்றுள்ளனர்.

அவர்கள் அந்தத் தீவில் நீராடிவிட்டு மீண்டும் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, அந்த மிதவைப்படகு உடைந்து கவிழ்ந்தமையாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் இந்த மிதவைப்படகில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் இருவரும் பாதுகாப்பு அங்கிகளை அணிந்திருக்காததால் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்ததுடன், இன்று (29) காலை பொலிஸாரும் கிராம மக்களும் இணைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் மூலம் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (29) மஹியங்கனை பதில் நீதவான் எஸ். கோவின்ன மதியம், விபத்து நடந்த இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, மரணித்தவரின் உடல்களை மஹியங்கனை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

ரிதீமாலியத்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now