நுவரெலியா கிரகரி வாவியில் மிதக்கும் சடலம்!
News

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியிலுள்ள கிரகரி வாவியில் இனம்தெரியாத ஒருவரினுடைய சடலமொன்று இன்று (06) திங்கட்கிழமை காலை இனம்காணப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோ குறித்த சடலம் தொடைஎப்பில் மிதப்பதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த சம்பவ இடத்துக்கு சென்றதோடு, நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்துக்கு வருகை தந்து சடலத்தினை பார்வையிட்டதன் பின்னர், சடலம் வாவியில் இ ருந்து மீட்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபர் வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா? அல்லது அந்த நபரினை எவராவது கொலை செய்து வாவியில் எறிந்து சென்றார்களா என்பது தொடர்பில் பலகோணங்களில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளினை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், குறித்த மரண விசாரணைகளின் பின்னர் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வி.தீபன்ராஜ்