கங்கையில் மிதந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனி...
News
கங்கையில் மிதந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனின் பிரதான துப்பாக்கிதாரியின் சடலம்!
இரு கைகளும் கால்களும் கொன்கிரீட் தூண் ஒன்றோடு கட்டப்பட்ட நிலையில் கிங் கங்கையில் மிதந்த சடலமானது 'லொக்கு பெட்டி' என்றழைக்கப்படுகின்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனினுடைய பிரதான துப்பாக்கிதாரியான 'அல்மேதா' என்பவருடையது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது கிங் கங்கையில் மிதந்து கொண்டிருந்த நிலையில், கடந்த 23ஆம் திகதி இரவில் போத்தல பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டது.
இதன்படி, சடலத்தின் தலைப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதினால் அதனை அடையாளம் காண முடியாமல் இருந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்டிருந்த மேலதிக விசாரணைகளின் போது, அது அஹுங்கல்ல பகுதியினை சேர்ந்த விராஜ் ரஷ்மிக டி சொய்சா என்கின்ற 'அல்மேதா' என்பவருடையது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபரறோடு நெருங்கிய தொடர்பினை பேணிய பெண் ஒருவர், அவரது உடலிலிருந்த பச்சை குத்தல்களினை வைத்து சடலத்தை அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவரது பெற்றோரும் சடலத்தினை அடையாளம் காட்டியுள்ளதோடு, கடந்த 4 வருடங்களாக அவருடன் எந்தவித தொடர்பும் இருக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலையுண்ட குறித்த நபர், 'லொக்கு பெட்டி' என்ரூ அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவனினுடைய பிரதான துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, திருகோணமலை, அஹுங்கல்ல மற்றும் காலி ஆகிய பகுதிகளில் 'லொக்கு பெட்டி'யினுடைய வழிநடத்தலின் கீழ் நடத்தப்பட்ட மூன்று கொலைச் சம்பவங்களிலும் இவரே துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் ஒரு சந்தர்ப்பத்தில் 13 கிலோவிற்கும் அதிக போதைப்பொருளோடு கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான பல குற்றச்சாட்டுகளும் நிலுவையிலுள்ளன.
இவர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாக இருந்தவர் என்பத்தோடு, 'கரன்தெனிய சுத்தா'வின் தரப்பினருக்கு இவர் கடுமையான அச்சுறுத்தலாக விளங்கியவர் என்பதுவும் தெரியவந்துள்ளது.
மேலும், சடலத்தின் மீது நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், கூர்மையான ஆயுதத்தினால் கழுத்தில் வெட்டப்பட்டமையினாலேயே குறித்த மரணம் சம்பவித்துள்ளது என தெரியவந்துள்ளது.