ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம்: உறவினர்களிடம் ஒப்படைப...
News
ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம்: உறவினர்களிடம் ஒப்படைப்பு!
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று பகுதியில் பிறந்து கோளாவில் 2 இல் வசித்து வந்த 51 வயதுடைய சாமித்தம்பி திவ்வியராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
புதன்கிழமை (18) அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்ட குறித்த சடலம் தொடர்பில் குடும்பத்தார் அவரை தேடிவந்த நிலையில் ஊடகங்கள் வாயிலாக அறிந்த உறவினர்கள் சடலத்தை நேரில் சென்று அடையாளம் காட்டினர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மரண விசாரணை அதிகாரி ஆகியொர் சடலத்தை பார்வையிட்டனர்.
தொடர்ந்து தடயவியல் பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக புதன்கிழமை (18) ஒப்படைக்கப்பட்டது.
மேலும் ஒரு மாதத்திற்கு முன்னர் உயிரிழந்தவரின் மனைவி மரணடைமடைந்த நிலையில் அவர் உறவினர்களது வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திப் பின்னணி
பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் புதன்கிழமை(18) ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.
ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் முதலை கடித்து உள்ளதா? அல்லது தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதா என அங்கு சென்ற அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 5 அடி 6 அங்குலம் உயரம் மற்றும் சுமார் 45 வயது முதல் 50 வயது வரை மதிக்கத்தக்க சடலத்தை அக்கரைப்பற்று பொலிசாருடன் இணைந்து அம்பாறை தடயவியல் பிரிவு பொலிசார் பொதுமக்களின் உதவியுடன் சடலத்தை கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் மீட்கப்பட்ட இச்சடலம் சிதைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் காணாமல் சென்ற நபர்கள் தொடர்பில் எதுவித முறைப்பாடுகளும் இல்லை என்பதுடன் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உயிரிழந்தவரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவிகளை நாடியுள்ளனர்.
அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனைக்கு அமைய அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழிகாட்டுதலில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்