தெதுரு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்!
News

தெதுரு ஓயாவினுடைய தாழ்நிலப் பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கையினை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாரியப்பொல, நிகவெரட்டிய, மஹோ மற்றும் கொபேகனே, பிங்கிரிய, பள்ளம மற்றும் சிலாபம், ஆரச்சிகட்டுவ, ரஸ்நாயக்கபுர போன்ற தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்தோடு, இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தெதுரு ஓயா ஆற்றுப்படுகையினுடைய மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்த கணிசமான மழைவீழ்ச்சியின் காரணமாக, தெதுரு ஓயாவின் நீர்மட்டம் வெள்ளப் பெருக்கின் மட்டத்தினை நெருங்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தினுடைய வான் கதவுகள் திறக்கப்பட்டு, தற்போது வினாடிக்கு 16,500 கன அடி என்னும் வேகத்தில் தெதுரு ஓயாவிற்கு நீர் திறந்து விடப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் நீரின் அளவைக் கொண்டு, எதிர்வருகின்ற நேரங்களில் குறித்த அளவை மேலும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.