New Updates! Fresh news just arrived.

கொழும்பில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி சிறுவன் ...

News

கொழும்பில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி சிறுவன் உயிரிழப்பு!

August 17, 2026 8:04 am
கொழும்பில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி சிறுவன் உயிரிழப்பு!
கொழும்பு 09 பகுதியில் அமைந்துள்ள பல மாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்து கீழே விழுந்ததில் 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

14 மாடிகளைக் கொண்ட குறித்த குடியிருப்பின் மேல் தளத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் சிறுவன் இருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அங்கு நின்று சுற்றுப்புறத்தை பார்த்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் கீழே விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களைத் திரட்டும் வகையில் மருதானை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now