மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் பலி! - Gu...
News
மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் பலி!
மட்டக்களப்பு கிரான், கூளாக்காடு பகுதியில் ஆலய உற்சவத்தின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (11) இரவு சுமார் 11 மணியளவில் சித்தி விநாயகர் ஆலய உற்சவ நிகழ்வின்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெடிக்காமல் அகற்றப்பட்டிருந்த பெரிய வெடியை பார்வையிட சிறுவன் சென்றபோது, அது எதிர்பாராத விதமாக வெடித்ததில் படுகாயமடைந்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.