New Updates! Fresh news just arrived.

யாழில் திடீரென வயிற்றோட்டம் ஏற்பட்ட சிறுவன் உயிரிழப்பு! -...

News

யாழில் திடீரென வயிற்றோட்டம் ஏற்பட்ட சிறுவன் உயிரிழப்பு!

February 2, 2026 9:05 pm
யாழில் திடீரென வயிற்றோட்டம் ஏற்பட்ட சிறுவன் உயிரிழப்பு!
யாழில் கிருமித் தொற்றினால் சிறுவன் ஒருவன் நேற்றிரவு உயிரிழந்துள்ளான். கோண்டாவில் - இருபாலை வீதியைச் சேர்ந்த மகிந்தன் லர்மிகன் (வயது 11) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு நேற்றையதினம் வயிற்றோட்டம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 5.00 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.

வயிற்றோட்டம் ஏற்பட்டு, உடலில் நீர்ச்சத்து குறைந்து கிருமித்தொற்றினால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளினை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now