New Updates! Fresh news just arrived.

அல்லைப்பிட்டியில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனு...

News

அல்லைப்பிட்டியில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டி ஊர்காவற்றுறையில் போராட்டம்!

March 10, 2026 7:09 pm
அல்லைப்பிட்டியில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டி ஊர்காவற்றுறையில் போராட்டம்!
கடந்த பெப்ரவரி மாதம் அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிசாரினுடைய துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ன்னும் சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி இன்று (10) ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மனித உரிமை ஆர்வலர் அமைபால் முனெடுக்கப்பட்டிருந்த குறித்த போராட்டத்தில் சிறுவனினுடை உறவுகள் மற்றும் ஏனையோர் கலந்துகொண்டு, பொலிசாருக்கு எதிரான கோசங்கள் தாங்கிய பதாகைகளோடு குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக குறித்த போராட்டம் ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக காலை 11 மணக்கு ஆரம்பமானது.

போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில் நீதிமன்ற பொலிசாரால் நீதுமன்றுக்கு முன்பாக போராட்டம் நடத்த முடியாது எனக் கூறி நீதிமன்ற வளாகத்தை கடந்து போராட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

பொலிசாரின் கோரிக்கையை ஏற்ற போராட்டக்காரர்கள் பின்பு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது பொலிசாரினுடைய செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் எழுதப்பட்ட பதாகைகளினை தாங்கி, கோசமிட்டு தமது எதிர்ப்பினை காட்டிய போராட்டக் காரர்கள் குறித்த கொலைக்கு காரணமான பொலிசாரினை தண்டிக்க வேண்டும் எனவும் குறிப்பாக தனது மகனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே சுட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

அத்தோடு, மிலேச்சத்தனமான கொலைகளினை பொலிசார் இனியொரு தடவை மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியதோடு, நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

கடந்த 10 ஆம் திகதி அதிகாலை 1.15 மணியளவில் வேலணை - அல்லைபிட்டிப் பகுதியில் உத்தரவினை மீறி கடமையிலிருந்த பொலிசாரை மோதிவிட்டு தபிச்செல்ல முற்றட்ட ஹயஸ் ரக வாகனம் மீதே தாம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதன் போதே குறித்த 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவிதிருந்தனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now