New Updates! Fresh news just arrived.

இலஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோ...

News

இலஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது!

August 11, 2026 1:15 pm
இலஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது!
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் திங்கட்கிழமை(10) கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கைது நடவடிக்கை அக்கரைப்பற்று - சாகாமம் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

பொறிவைத்து பிடிபட்ட சம்பவம்

பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள், திட்டமிடப்பட்ட பொறிமுறையைப் பயன்படுத்தி குறித்த உத்தியோகத்தர் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் போதே அவரை கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.

"கைது செய்யப்பட்ட உத்தியோகத்தர் தற்போது அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீதான மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்."

அம்பாறையில் தீவிர கண்காணிப்பு

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் நிலவும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீவிர கவனஞ்செலுத்தி வருவதாகவும், வரும் நாட்களில் மேலும் பல அரச உத்தியோகத்தர்கள் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now