இலஞ்ச ஊழல் வழக்கு: சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகள் இருவருக...
News
இலஞ்ச ஊழல் வழக்கு: சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!
ஹெரோயின் போதைப்பொருள் வழக்கில் சந்தேகநபருக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காக 20,000 ரூபா இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தினை சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகளினையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினுடைய அதிகாரிகளினால் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தினுடைய பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஆகிய இரு பொலிஸ் அதிகாரிகளுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரினையும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.ஆர்.எம். கலீல் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் பின்னணி:
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி, 70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளினை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரினை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்த நிலையில் குறித்த சந்தேகநபர் அடுத்த நாள் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
இதன்போது, சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தினுடைய பதில் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர், போதைப்பொருள் வழக்கு குறித்து நீதிமன்றத்தில் 'பி' அறிக்கை (B-Report) மூலம் உண்மைகளினை தெரிவிக்காமல், முறையான குற்றப்பத்திரிகை (Charge Sheet) மூலமாக மட்டுமே வழக்கைத் தாக்கல் செய்வதற்கு ஒப்புக்கொண்டு, அதற்குப் பதிலாகச் குறித்த சந்தேகநபரிடம் 20,000 ரூபா இலஞ்சமாகக் கேட்டுள்ளார்.
இத்தொகையினை செலுத்தச் சந்தேகநபர் சம்மதித்ததோடு, ஆகஸ்ட் 17 ஆம் திகதி பணத்தினை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பணத்தினை பெற்றுக்கொள்ள நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், பொலிஸ் பரிசோதகர் பெரியநிலாவணை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாகப் பணி நிமித்தம் சென்றிருந்த நிலையில், அவரது அறிவுறுத்தலின் பேரில் பணத்தினை பெற்றுக்கொள்வதற்காகப் பொலிஸ் கொன்ஸ்டபிள் அனுப்பப்பட்டுள்ளார்.
அப்போது அங்குத் தயாராகவிருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினுடைய அதிகாரிகள், பணத்தைப் பெற்றுக் கொண்ட கொன்ஸ்டபிளைக் கையும்களவுமாகக் கைது செய்தனர்.
இதன்படி, அவரிடம் மேற்கொள்ளப்பட்டிருந்த விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பொலிஸ் பரிசோதகரும் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த இவ்விரு அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதினைத் தொடர்ந்து விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாறுக் ஷிஹான்