பேருந்துக் கட்டணத் திருத்தம் ஒரு திரிபு: தனியார் பேருந்து...
News
பேருந்துக் கட்டணத் திருத்தம் ஒரு திரிபு: தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!
முன்மொழியப்பட்ட வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தம் ஒரு திரிபு என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கட்டணங்களைக் கட்டுப்படுத்துவதை அரசாங்கம் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளது எனவும் குறித்த சங்கம் தலைவர் ஜெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட குறுகிய தூரப் பேருந்துகளும், சுமார் 3,000 நீண்ட தூரப் பேருந்துகளும் இயக்கப்படுவதாக அவர் வெளிப்படுத்தினார்.
இருப்பினும், இந்த இரண்டு சேவைகளுக்கும் இரண்டு வகையான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறைந்தால், குறுகிய தூர சேவைகளுக்கு வழங்கப்பட்ட 12 சதவீத கட்டணத் திருத்தத்திற்கு என்னவாகும் என்றும் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்படி, டீசல் விலை குறைந்தாலும் கூட, எதிர்காலத்தில் குறுகிய தூர சேவைகளுக்கான கட்டணங்களைக் குறைக்க இயலாது என்றும் அவர் வலியுறுத்துள்ளார்.
தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு, ஆண்டுதோறும் நடைபெறும் பேருந்துக் கட்டணத் திருத்தத்தில், நெடுந்தூரப் பேருந்துச் சேவைகளுக்கு 20 சதவிகிதக் கட்டண உயர்வை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இது தொடர்பாகத் தனது கருத்துக்களைத் தெரிவித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, இதன் காரணமாக எதிர்காலத்தில் பேருந்துத் துறை கடுமையான நெருக்கடியைச் சந்திக்கும் என்றும் வலியுறுத்தினார்.
முன்மொழியப்பட்ட இந்தப் பேருந்துக் கட்டணத் திருத்தம் இன்று (05) நள்ளிரவு தொடக்கம் அமுல்படுத்தப்படவுள்ளது.