New Updates! Fresh news just arrived.

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தின...

News

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பு!

March 23, 2026 7:22 pm
இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பு!
இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது 27 ரூபாவாகக் காணப்படும் ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 30 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏனைய கட்டணப் பிரிவுகளும் விகிதாசார அடிப்படையில் அதிகரிக்கப்படவுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற காரணிகளால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை உள்ளடக்கிய புதிய கட்டணப் பட்டியல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now