New Updates! Fresh news just arrived.

பேருந்து சங்கங்கள் இன்று அவசரக் கூட்டம் – சேவையிலிருந்து ...

News

பேருந்து சங்கங்கள் இன்று அவசரக் கூட்டம் – சேவையிலிருந்து விலகும் அபாயம்!

June 2, 2026 10:22 am
பேருந்து சங்கங்கள் இன்று அவசரக் கூட்டம் – சேவையிலிருந்து விலகும் அபாயம்!
டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்தாதது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக, பேருந்து சங்கப் பிரதிநிதிகள் இன்று (02) கூடவுள்ளனர்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பேருந்து சேவைகளைத் தொடர்வது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அனைத்து பேருந்து சங்கப் பிரதிநிதிகளும் இன்று காலை ஒன்றுகூடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், "இன்று எங்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய சங்கப் பிரதிநிதிகள் வரவுள்ளனர். குறிப்பாக, இந்த எரிபொருள் சிக்கலில் இருந்து எமது தொழிலை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து கலந்துரையாடவுள்ளோம். அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை.

அவர்கள் ஒரு கொள்கையில் உள்ளனர். எவ்வாறாயினும், தற்போது இந்தத் தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதால், சேவையில் இருந்து விலகுமாறு அனைத்து பேருந்து உரிமையாளர்களும் வலியுறுத்துகின்றனர். இருப்பினும், நாங்கள் சங்கமாகத் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி, இன்றைய தினம் இறுதித் தீர்மானத்தை அறிவிப்போம்" என்றார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now