300 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமு...
News
300 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!
ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியின் கீழ் 4,074 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தின் உப கருத்திட்டங்கள் 06 இல் ஒரு உப கருத்திட்டமான இராஜகிரிய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2020.03.04 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இக்கருத்திட்டத்தின் ஒப்பந்தகாரர்களின் பலவீனமான செயலாற்றுகை காரணமாக குறித்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து, அக்கருத்திட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவதற்குப் பொருத்தமான ஒப்பந்தக்காரர்களைத் தெரிவு செய்வதற்காக தேசிய போட்டி விலைமுறிக் கோரல் முறைமையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய, சமர்ப்பிக்கப்பட்டுள்ள 06 விலைமனுக்கள் தொடர்பாக உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் வழங்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில், இராஜகிரிய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தை அமுல்படுத்தும் ஒப்பந்தத்தை M/s Maga Engineering (Pvt) Ltd இற்கு வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.