New Updates! Fresh news just arrived.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர...

News

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம்!

January 20, 2026 2:57 pm
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம்!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக அரசு செலுத்த உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவை 2026 ஜனவரி மாதம் 01 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 06 மாத காலத்துக்கு ஏற்புடைய பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாக செலுத்துவதற்கும், அதன் பின்னர், தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் கேட்டறிந்து மேற்குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை நேரடியாக தோட்ட தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிலுக்கேற்ற நியாயமான நாளாந்த சம்பளத்தை வழங்கும் நோக்கத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஆகக்குறைந்த சம்பளத்தை ரூபா 1,550/- வரை அதிகரித்தல் மற்றும் வருகைக்கான நாளாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவாக அவர்களுக்கு ரூபா 200/- வழங்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி 2026 வரவுசெலவு திட்டத்தில் முன்மொழிந்துள்ளார்.

அதற்கமைய, குறித்த முன்மொழிவை அமுல்படுத்துவதற்காக 5,000 மில்லியன் ரூபா நிதி 2026 ஆண்டு வரவுசெலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அரசு செலுத்த உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவினை 2026 ஜனவரி மாதம் 01 திகதியில் இருந்து அமுலாகும் வகையில் 06 மாத காலத்துக்கு ஏற்புடைய பெருந்தோட்டக் கம்பனிகள் மூலம் செலுத்துவதற்கும், அதன் பின்னர், தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் கேட்டறிந்து மேற்குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவினை நேரடியாக தோட்ட தொழிலாளர்களினுடைய தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய, மேற்குறித்த முறைமையை பின்பற்றி குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now