ஈரான் - அமெரிக்கப் பேச்சுவார்த்தை இரத்து!
News

சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் இன்று (19) அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் விலகியதால் பேச்சுவார்த்தைகள் முறிந்துவிட்டதாக, சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி குறித்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட இராணுவச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் முதற்கட்டம் இன்று தொடங்கவிருந்தது.
இருப்பினும், ஈரானியப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கான தனது பயணத்தை இரத்து செய்ய அமெரிக்கத் துணை அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.