New Updates! Fresh news just arrived.

கிரிக்கெட் வீரர்களிடமிருந்து முன்கூட்டிய தனிநபர் வருமான வ...

News

கிரிக்கெட் வீரர்களிடமிருந்து முன்கூட்டிய தனிநபர் வருமான வரி அறவிடும் தீர்மானத்தை இரத்து செய்து உத்தரவு!

August 31, 2026 1:18 pm
கிரிக்கெட் வீரர்களிடமிருந்து முன்கூட்டிய தனிநபர் வருமான வரி அறவிடும் தீர்மானத்தை இரத்து செய்து உத்தரவு!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களிடமிருந்து முன்கூட்டிய தனிநபர் வருமான வரி (APIT) அறவிடுவது தொடர்பில் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் ரிட் கட்டளையொன்றைப் பிறப்பித்துள்ளது.

இலங்கை ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் கிரிக்கெட் அணிகளின் வீரர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் தீர்ப்பை அறிவித்த போதே நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் உள்நாட்டு இறைவரி ஆணையாளரினால் எதிர்காலத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்குப் பாதகம் ஏற்படாத வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now