இந்த வாரம் தொடக்கம் புதன்கிழமை அரச விடுமுறை இரத்து! - Gur...
News
இந்த வாரம் தொடக்கம் புதன்கிழமை அரச விடுமுறை இரத்து!
இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம், அதாவது ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை முதல் இந்த புதிய தீர்மானம் நடைமுறைக்கு வரும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவிய நெருக்கடி நிலைமையின் போது எரிபொருள் இருப்பைச் சேமிக்கும் நோக்கில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரச ஊழியர்களுக்கான விடுமுறை தினமாக அறிவித்து கடந்த மார்ச் 17ஆம் திகதி அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.