New Updates! Fresh news just arrived.

வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம்: வியாபாரி கைது! - ...

News

வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம்: வியாபாரி கைது!

August 20, 2026 12:11 pm
வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம்: வியாபாரி கைது!
கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா தோட்டபயிர்ச்செய்கையை பொலிஸார் புதன்கிழமை (19) அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு
கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே குறித்த சோதனை நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.

கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாக இலங்கை நாட்டு கஞ்சாவினை விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளானது மிகவும் பாதுகாப்பாக, ஒரு முறைப்படியான பயிர்ச்செய்கை போன்று வளர்க்கப்பட்டிருந்ததோடு, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அங்கு வளர்க்கப்பட்ட செடிகளைக் கைப்பற்றிப் பிடுங்கி, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கல்முனைத் தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளினை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now