வங்காள விரிகுடாவில் சரக்குக் கப்பல் விபத்து – 24 பேர் தொட...
News
வங்காள விரிகுடாவில் சரக்குக் கப்பல் விபத்து – 24 பேர் தொடர்பில் தேடுதல் நடவடிக்கை!
வங்காள விரிகுடாவில் ஒடிசா கடற்கரையிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் பனாமா நாட்டுக் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“MV Ocean-Winner” என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த கப்பல், கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி இரவு பாரதீப் துறைமுகத்திலிருந்து புறப்பட்டதாகவும், அதில் சுமார் 1,700 தொன் இரும்புத் தாது ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து ஏற்பட்டபோது கப்பலில் மொத்தம் 24 பணியாளர்கள் இருந்துள்ளனர். இவர்களில் 20 பேர் சீனாவையும், மூவர் மியான்மரையும், ஒருவர் பங்களாதேஷையும் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
ஓகஸ்ட் 22ஆம் திகதி இரவு சுமார் 11.48 மணியளவில் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டமை தொடர்பாக இந்தியாவின் ஸ்ரீ விஜயபுரத்தில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, கப்பல் பணியாளர்களைத் தேடும் வகையில் மீட்பு உதவி கோரப்பட்டுள்ளதாக கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகவல் கிடைத்தவுடன் இந்திய கடலோரக் காவல்படையும் கடற்படையும் இணைந்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. இதற்காக மூன்று கடலோரக் காவல் படகுகள் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடற்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுவரை கப்பலில் இருந்த எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் பயணிக்கும் ஏனைய கப்பல்களும் மீட்புப் பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.