ஞானசார தேரர் மீதான வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத...
News
ஞானசார தேரர் மீதான வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!
இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பொது பல சேனா அமைப்பினுடைய பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, ஜூலை 31-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றமானது உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கை விசாரிக்கின்ற கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி.ராகல இன்று (26) கடமை நிமித்தம் விடுமுறையில் இருந்ததமையால், இன்றைய வழக்கினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டிருத்தது.
இதன்படி, குறித்த வழக்கை முன் - விசாரணை மாநாட்டிற்காக ஜூலை 31-ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்ட நிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களினை வெளியிட்டதன் ஊடாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தினை மீறும் வகையில் செயற்பட்டதாகக் குற்றம் சாட்டியே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.