New Updates! Fresh news just arrived.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு எதிரான வழக்கு: ம...

News

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு எதிரான வழக்கு: மீண்டும் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

June 9, 2026 4:02 pm
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு எதிரான வழக்கு: மீண்டும்  நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!
ரூபா பத்தாயிரம் தருவதாக கூறி ஓரினச்சேர்க்கையில் (தன்னினச்சேர்க்கை) ஈடுபட்ட வர்த்தகருக்கு மீண்டும் கல்முனை நீதிவான் நீதிமன்று 10 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் மன்றிற்கு குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான வர்த்தகருக்கு எதிர்வரும் யூன் மாதம் 18 ஆம் திகதி 10 நாட்கள் விளக்கமறியலில்வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் நீண்ட காலமாக குறித்த ஓரினச்சேர்க்கை (தன்னினச்சேர்க்கை)செயற்பாடு இடம்பெற்று வந்துள்ளது.

இதனை அறிந்த குறித்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளனர்.இதன்போது அங்கு சென்ற இரு சிறுவர்களினையும் வரவேற்ற குறித்த வர்த்தகர் ஓரினச்சேர்க்கை (தன்னினச்சேர்க்கை) செயற்பாட்டிற்காக பத்தாயிரம் ரூபா தருவதாக பேரம் பேசியுள்ளார்.பின்னர் சிறுவர்களில் ஒருவரினை குறித்த செயற்பாட்டியில் ஈடுபடுத்தியுள்ளார். இதன்போது மற்றுமொரு சிறுவன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட காணொளியை வர்த்தகரின் கைத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் ஏற்கனவே பேரம் பேசிய பத்தாயிரம் ரூபாகிடைக்கப்பெறாமையால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட காணொளியை பதிந்த வர்த்தகரினுடைய கைத்தொலைபேசியினை இரு சிறுவர்களும் அடாத்தாக எடுத்துச்சென்றுள்ளனர்.

அதுமாத்திரமின்றி குறித்த சிறுவர்கள் அச்செயற்பாட்டிற்கு பேரம் பேசிய பணத்தினை தருமாறு கோரி மிரட்டி அச்சுறுத்தியதோடு, தரவேண்டிய தொகை (ரூபா பத்தாயிரம்) கிடைக்கப்பெறாத பட்சத்தில் சமூக ஊடகங்களில் பிரசுரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.(தற்போது குறித்த காணோளியானது சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டு வைரலாகி வருகின்றது)

இதனைத்தொடர்ந்து, சுதாகரித்த குறித்த 56 வயதுடைய திருமணமான வர்த்தகர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக கடந்த மே மாதம் 06 ஆம் திகதி சென்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டில் தனது வர்த்தக நிலையத்திற்கு வருகை தந்த குறித்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் மேசையிலிருந்த விலையுயர்ந்த கைத்தொலைபேசியை திருடிச் சென்றதாக அம்முறைப்பாட்டில் தெரிவித்திருந.

வர்த்தகரின் குறித்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.இதன் போது அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியில் வைத்து 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்களையும் கைது செய்து கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பல்வேறு திடுக்கிடும் விடயங்களானது வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, கடந்த மே 21 ஆம் திகதி குறித்த வழக்கானது கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த காணொளியை இரு சிறுவர்கள் சார்பாக ஆஜரான எதிர்தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு சமர்ப்பித்த நிலையில் வழக்கின் சான்றுப்பொருளாக எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிவான் கைதான இரு சிறுவர்களில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரை சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறும் பிரதான சந்தேக நபரான வர்த்தகரை கைது செய்யுமாறு கட்டளை பிறப்பித்ததுடன் குறித்த வழக்கினை ஒத்தி வைத்திருந்தார்.

இதன் போது பிரதான சந்தேக நபரான குறித்த வர்த்தகர் தலைமறைவாகி இருந்ததோடு, இவ்வழக்கும் மே மாதம் திங்கட்கிழமை (25) விசாரணைகளுக்காக மறுதவணை இடப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த வழக்கானது மன்றில் விசாரணைக்கு கடந்த திங்கட்கிழமை (25) கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் எடுத்திருந்த போது 4 நாட்கள் தலைமறைவாகி இருந்த வர்த்தகர் 5 சட்டத்தரணிகளுடன் மன்றில் சரணடைந்திருந்தார்.

இதன்போது குறித்த சந்தேக நபரான வர்த்தகர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு சட்ட நடவடிக்கைக்காக வாக்கு மூலம் சந்தேக நபரிடம் பதியப்பட்டதன் பின்னர் மீண்டும் மன்றிற்கு அழைத்து வரப்பட்டு மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபரான வர்த்தகருக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 08 ஆம் திகதி 14 நாட்கள் விளக்கமறியலில்வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவானால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விடயம் குறித்து கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைக்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார் வழிகாட்டுதலின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையிலான பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம் முஸ்தபா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now