New Updates! Fresh news just arrived.

தலை கவசமின்றி பயணித்தவர்களுக்கு எதிராக வழக்கு; போக்குவரத்...

News

தலை கவசமின்றி பயணித்தவர்களுக்கு எதிராக வழக்கு; போக்குவரத்து பிரிவினர் அதிரடி!

September 1, 2026 3:49 pm
தலை கவசமின்றி பயணித்தவர்களுக்கு எதிராக வழக்கு; போக்குவரத்து பிரிவினர் அதிரடி!
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சட்டங்களை மீறிச் செயற்பட்டமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் (Helmet) அணியாமல் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியமை தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரினால் நேற்று (31) இத்திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனைக்கு அமைவாக இச்சோதனை நடத்தப்பட்டது. மேலும் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் இக்கள நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, பிரதான வீதிகளில் ஹெல்மட் அணியாமல் அபாயகரமாக வாகனங்களைச் செலுத்தியவர்கள் மற்றும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளைப் பேணாத சாரதிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், 10 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.

பொதுமக்களின் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய திடீர் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட சம்மாந்துறை பொலிஸார், போக்குவரத்து விதிகளை மீறிச் செல்பவர்கள் மற்றும் தலைக்கவசமின்றி வாகனம் செலுத்துவோருக்கு எதிராகத் தட்டச்சு முறையில் நீதிமன்ற நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now