New Updates! Fresh news just arrived.

யோஷித மற்றும் கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை...

News

யோஷித மற்றும் கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!

September 17, 2026 1:26 pm
யோஷித மற்றும் கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது.

இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிமன்றம், இவ்வழக்கு விசாரணையை வழக்குக்கு முந்தைய விசாரணை மாநாட்டிற்காக அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாத போதிலும், பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவின் அரச கடற்படை பயிற்சி கல்லூரிக்கு பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றம் புரிந்துள்ளதாகக் கூறி இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now