New Updates! Fresh news just arrived.

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து மத்திய வங்கி ...

News

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை!

August 6, 2026 9:07 am
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை!
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை!

இலங்கையில் சட்டவிரோதமான பிரமிட் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிறுவனங்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 83(C) பிரிவின் கீழ் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னரே குறித்த நிறுவனங்கள் தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

புதிய உறுப்பினர்களை இணைப்பதன் மூலம் வருமானம் ஈட்டும் திட்டங்கள் மற்றும் நடைமுறையில் சாத்தியமற்ற அளவுக்கு அதிகமான இலாபத்தை வழங்குவதாகக் கூறப்படும் முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், எந்தவொரு முதலீட்டிலும் ஈடுபடுவதற்கு முன்னர், அந்த முதலீட்டு வாய்ப்பு சட்டபூர்வமானதா மற்றும் நம்பகத்தன்மை கொண்டதா என்பதை உரிய முறையில் ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிதி மோசடிகள் மற்றும் பண இழப்புகளைத் தவிர்க்க, முதலீடு தொடர்பான முடிவுகளை மிகுந்த அவதானத்துடன் மேற்கொள்ள வேண்டும் என மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
Tiens Lanka Health Care (Pvt) Ltd

Best Life International (Pvt) Ltd

Mark – Wo International (Pvt) Ltd

V M L International (Pvt) Ltd

Global Lifestyle Lanka (Pvt) Ltd

Fast3Cycle International (Pvt) Ltd

OnmaxDT

Fastwin (Pvt) Ltd

Fruugo Oline App / Fruugo Oline (Pvt) Ltd

Ride to Three Freedom (Pvt) Ltd

Qnet / Questnet

Ledger Block

Isimaga International (Pvt) Ltd

Beecoin App and Sunbird Foundation

Windex Trading

The Enrich Life (Pvt) Ltd

Smart Win Entrepreneur (Pvt) Ltd

Net Fore International (Pvt) Ltd / Netrrix

Pro Care (Pvt) Ltd and Shade of Procare (Pvt) Ltd

SGO / sgomine.com

Infinity Rover (Pvt) Ltd
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now