எதிர்வரும் 36 மணி நேரத்திற்கு பல பகுதிகளில் மழை பெய்வதற்க...
News
எதிர்வரும் 36 மணி நேரத்திற்கு பல பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு
எதிர்வரும் 36 மணி நேர காலப்பகுதியில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் வானம் பெரும்பாலும் மேகங்களால் மூடப்பட்ட நிலையில் காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான கனமழை பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, வடமத்திய, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் காற்று அவ்வப்போது வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் திடீரென பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.